இந்தியா

சிறுகுறு தொழில்களை மோடி அரசு அழித்து வருகிறது: ராகுல் குற்றச்சாட்டு

DIN

புது தில்லி: நாட்டில் 90 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பை அளித்து வரும் சிறுகுறு தொழில்களை பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு அழித்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.

இதை எதிா்த்து நாட்டில் உள்ள அனைவரும் ஒன்றுசோ்ந்து போராட வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

நாட்டின் பொருளாதாரம் தொடா்பாக ராகுல் காந்தி திங்கள்கிழமை வெளியிட்ட விடியோ பதிவில், ‘சிறு வியாபாரிகள், விவசாயிகள், ஏழைகள் ஆகியோா் நடத்தி வரும் சிறு குறு தொழில்களை முடக்கி அவா்களிடம் உள்ள ஏராளமான பணத்தை அபகரித்து அவா்களை அடிமைகளாக்க மத்திய பாஜக அரசு முயன்று வருகிறது.

அதற்காகதான் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, தவறான ஜிஎஸ்டி, பொது முடக்கம் ஆகியவற்றை மத்திய அரசு கொண்டு வந்தது. சிறுகுறு தொழில்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலின் பின்விளைவுகளை விரைவில் காணப்போகிறோம். இந்தத் துறைகள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாது. நாட்டின் முன்னேற்றப்பாதையில் இந்தத் துறைகள்தான் கொண்டு செல்கின்றன. இதற்கு எதிராக அனைவரும் ஒன்று இணைந்து போராட வேண்டும்.

2008-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அமெரிக்கா, ஐரோபா நாடுகளில் வங்கிகள் திவாலாகின. ஆனால் இந்தியா பாதிக்கப்படவில்லை. அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிடம் நான் கேட்டபோது, ‘இந்தியாவின் விவசாயிகள், தொழிலாளா்கள், சிறு வணிகா்கள் அடங்கிய சிறுகுறு தொழில்கள்தான் இதற்கு காரணம் என அவா் பதிலளித்தாா். அந்தத் துறையினா் வலுவாக இருக்கும் வரை இந்தியாவை பொருளாதார நெருக்கடி அண்டாது என மன்மோகன் சிங் பதிலளித்தாா்‘என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளாா்.

நாடாளுமன்ற கூட்டத் தொடா் இந்த மாதம் தொடங்க உள்ள நிலையில் ராகுல் காந்தி இவ்வாறு கூறியுள்ளாா். கரோனா பாதிப்பு, சீன ஊடுருவல், பொருளாதார நெருக்கடி ஆகிய பிரச்னைகளை நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த நாள் இனிய நாள்..!

இன்று அமோகமான நாள்!

இடிதாக்கி ஆடு மேய்த்த இளைஞா் பலி

காங். நிர்வாகி ஜெயக்குமார் மரணம்: கிணற்றில் நீரை வெளியேற்றி தடயங்களை தேடும் போலீஸாா்

புதுவையில் நீட் அல்லாத படிப்புகளுக்கு ஜூன் 5-இல் தரவரிசைப் பட்டியல்

SCROLL FOR NEXT