தில்லி போராட்டத்திற்கு ஆதரவு: ஹரியாணா அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்ற எம்.எல்.ஏ.
தில்லி விவசாயப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஹரியாணா மாநில பாஜக அரசுக்கான ஆதரவை சுயேட்சை எம்.எல்.ஏ. சோம்பீர் சங்வான் திரும்பப் பெற்றார்.
தில்லி விவசாயப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஹரியாணா மாநில பாஜக அரசுக்கான ஆதரவை சுயேட்சை எம்.எல்.ஏ. சோம்பீர் சங்வான் திரும்பப் பெற்றார்.
தில்லியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனர். தொடர்ந்து 6ஆவது நாளாக தொடரும் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தில்லி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஹரியாணா மாநில சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் சோம்பீர் சங்வான் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த தனது ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.
மேலும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கால்நடை மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். தொடர்ந்து ஹரியாணா எல்லையில் நடைபெறும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்திலும் தன்னை இணைத்துக் கொள்ள உள்ளதாக சோம்பீர் சங்வான் அறிவித்துள்ளார்.