முகப்பு
செய்தியாளர் சந்திப்பில் தர்ஷன் பால்
இந்தியா

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும்: விவசாயிகள்

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என விவசாயிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:01 PM
செய்தியாளர் சந்திப்பில் தர்ஷன் பால்
பகிர்:

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என விவசாயிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

இதுபற்றி விவசாயத் தலைவர் தர்ஷன் பால் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது:

"விவசாய அமைப்புகளிடையே பிளவுகளை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. ஆனால், அது நடக்காது. 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுக்க வேண்டும்" என்றார் அவர்.

மற்றொரு விவசாயத் தலைவர் குர்னம் சிங் பேசுகையில், "புதிய சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால், எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நாள்களில் மேற்கொண்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்" என்றார்.

செய்தியாளர்கள் சந்திப்புக்கு முன்பு, சுமார் 32 விவசாய சங்கத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இந்தக் கூட்டத்தில் பாரதிய விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் பங்கேற்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →