இந்தியா

தில்லி வன்முறை வழக்கு: உமர் காலித்தின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

DIN

புதுதில்லி வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜே.என்.யு முன்னாள் மாணவர் உமர் காலித்தின் நீதிமன்றக் காவலை டிசம்பர் 16 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடக்கு தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டிற்கும் எதிராக கடந்த பிப்ரவரி மாதம் பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில்  சமூக அமைதியை குலைக்கும் வகையில் வன்முறைச் சம்பவங்களைத் திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு, ஜே.என்,யு முன்னாள் மாணவர் உமர் காலித் மற்றும் மாணவர் ஷர்ஜீல் இமாம் கடந்த மாதம் 13-ஆம் தேதி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் புதன்கிழமை இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது தில்லி நீதிமன்றம் முன்னாள் ஜே.என்.யூ மாணவரான உமர் காலித்தின் நீதிமன்றக் காவலை டிசம்பர் 16 வரை நீட்டித்து உத்தரவிட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

SCROLL FOR NEXT