விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளித்த பிரபல மல்யுத்த வீரர் 'தி கிரேட் காளி' 
இந்தியா

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளித்த பிரபல மல்யுத்த வீரர் 'தி கிரேட் காளி'

தில்லியில் நடைபெற்றும் வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு பிரபல மல்யுத்த வீரர் ’தி கிரேட் காளி’ ஆதரவு தெரிவித்துள்ளார்.

DIN

தில்லியில் நடைபெற்றும் வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு பிரபல மல்யுத்த வீரர் ’தி கிரேட் காளி’ ஆதரவு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் 7 நாட்களாக தலைநகர் தில்லியில் முகாமிட்டு போராடி வருகின்றனர்.

விவசாயிகளின் இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல மல்யுத்த வீரரான ’தி கிரேட் காளி’ ஆதரவு தெரிவித்து விடியோ வெளியிட்டுள்ளார். தில்லி எல்லையில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு நேரடியாக சென்ற அவர் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்துப் பேசினார்.

இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ஜெய் ஜவான் ஜெய் கிஷான்’ என அவர் பதிவிட்டுள்ளார். இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

முன்னதாக செவ்வாய்க்கிழமை கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ உரிமைகளுக்காக நடைபெறும் அமைதி வழியான போராட்டத்திற்கு கனடா உடன் நிற்கும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

SCROLL FOR NEXT