‘தில்லியில் இரவுநேர பொதுமுடக்கம் இல்லை’: நீதிமன்றத்தில் தில்லி அரசு பதில்
தில்லியில் இரவுநேரப் பொதுமுடக்கம் குறித்த உத்தரவுகள் எதுவும் இல்லை என உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்துள்ளது.
தில்லியில் இரவுநேரப் பொதுமுடக்கம் குறித்த உத்தரவுகள் எதுவும் இல்லை என உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று பாதிப்புகள் குறித்த தில்லி உயர்நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் , “தில்லியில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்துவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார்.
கரோனா விதிமீறல்கள் தொடர்பாக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடமிருந்து ரூ.17 கோடிக்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தில்லி அரசு தெரிவித்தது.
கரோனா தொற்று தொடர்பாக விதிக்கப்பட்டக் கட்டுப்பாடுகள் நடப்பாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை அமலில் உள்ளதாகத் தெரிவித்த தில்லி அரசு இரவுநேர பொதுமுடக்கம் விதிப்பது குறித்த உத்தரவுகள் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டது.
அதனைத் தொடர்ந்து தில்லியில் கரோனா தொற்றை அடையாளம் காண விரிவான அளவில் சோதனையில் கவனம் செலுத்துமாறு நீதிமன்றம் தில்லி அரசிடம் கேட்டுக் கொண்டது. இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 14ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.