உத்தரப் பிரதேசத்தில் புதாரா கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நான்கு வயது சிறுவன் வியாழக்கிழமை காலை உயிரிழந்தான்.
குல்பஹார் பகுதியில் உள்ள புதாரா கிராமத்தில் நான்கு வயது சிறுவன் புதன்கிழமை வீட்டின் அருகில் உள்ள 30 அடி ஆழத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.
மீட்புக் குழுவினர், தீயணைப்புத் துறை, உள்ளூர் காவல்துறை மற்றும் நிர்வாகம் இணைந்து சிறுவனை மீட்கும் பணியில் கடந்த 20 மணி நேரமாகத் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். சிறுவனுக்குத் தொடர்ந்து ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது.
பின்னர், 30 அடி ஆழ்துளைக் கிணற்றிலிருந்து சிறுவன் இன்று காலை வெளியே கொண்டுவரப்பட்டான். ஆனால், துரதிர்ஷ்டவசமாகச் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.