முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிதாக 5 ஆயிரம் பேருக்கு கரோனா

கேரளத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5 ஆயிரம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.31 லட்சமாக அதிகரித்துள்ளது.

Updated On : 5 டிசம்பர், 2020 at 6:53 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:32 PM


திருவனந்தபுரம்: கேரளத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5 ஆயிரம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.31 லட்சமாக அதிகரித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கேரளத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,000 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,31,615-ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

இதில் கரோனா தொற்றால் 61,393 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவிலிருந்து புதிதாக 5,820 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,67,694-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 32 பேர் பலியானதால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2390-ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.