முகப்பு
இந்தியா

பாகுபாடுகளை களைவதே அம்பேத்கருக்கு செய்யும் மரியாதை: ராகுல்

இந்தியாவை பாகுபாடற்றதாக மாற்றுவதே அம்பேத்கருக்கு நாம் செய்யும் சிறந்த மரியாதை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி (கோப்புப்படம்)
பகிர்:

இந்தியாவை பாகுபாடற்றதாக மாற்றுவதே அம்பேத்கருக்கு நாம் செய்யும் சிறந்த மரியாதை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

அம்பேத்கரின் 64வது ஆண்டு நினைவு நாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் அவரது திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாகுபாடற்ற இந்தியாவை உருவாக்குவதே அம்பேத்கருக்கு நாம் செய்யும் மிகச்சிறந்த மரியாதை என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ''நாட்டை கட்டமைப்பதில் அம்பேத்கரின் பங்களிப்பை நாம் இன்று நினைவில்கொள்கிறோம். இந்தியாவை அனைத்து விதமான பாகுபாடிலிருந்தும் விடுவிப்பதே அம்பேத்கருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை'' என்று பதிவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →