முகப்பு
இந்தியா

சி.ஏ. தேர்வு ஒத்திவைப்பு

நாளை(டிச.8) நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
கோப்புப்படம்
பகிர்:

நாளை(டிச.8) நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவித்துள்ளது. 

டிசம்பர் 8 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை சி.ஏ. பவுண்டேஷன் தேர்வு தாள் - 1 நடைபெற இருந்தது. இந்நிலையில் இது வருகிற 13 ஆம்  தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

டிசம்பர் 13 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெறும். ஏற்கெனவே பதிவிறக்கம் செய்த நுழைவுச் சீட்டுகளை பயன்படுத்தி அதே தேர்வு மையங்களில் தேர்வர்கள் தேர்வினை எழுதலாம். தவிர்க்க முடியாத சில காரணங்களால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.