முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

நாடு தழுவிய முழு அடைப்புக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்: சிவசேனை

விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய முழு அடைப்புக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் திங்கள்கிழமை தெரிவித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
கோப்புப்படம்
பகிர்:

விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய முழு அடைப்புக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இதுபற்றி மும்பையில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

"இந்த முழு அடைப்புக்கு சிவசேனை ஆதரவளிக்கிறது. மக்கள் தாமாக முன்வந்து முழு அடைப்பில் பங்கெடுக்க வேண்டும். விவசாயிகளுக்கான உண்மையான ஆதரவை அது வெளிப்படுத்தும். இது அரசியல் சார்ந்த முழு அடைப்பல்ல. இருப்பினும், பல்வேறு அரசியல் கட்சிகள் இதில் பங்கெடுக்க முடிவெடுத்துள்ளன.

இது விவசாயிகளின் குரல்களைப் பலப்படுத்துவதற்கான முழு அடைப்பு.  

குளிரையும் அரசின் ஒடுக்குமுறையையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து 12 நாள்களாக தில்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை."

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து 12 நாள்களாக தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக டிசம்பர் 8-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்புக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →