வீட்டுக் காவலில் தில்லி முதல்வர் கேஜரிவால்: ஆம் ஆத்மி புகார்
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை காவல்துறையினர் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி புகார் தெரிவித்துள்ளது.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை காவல்துறையினர் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி புகார் கூறியுள்ளது.
கேஜரிவாலை சந்திக்க காவல்துறையினர் அனுமதி மறுப்பதாகவும் முதல்வர் கேஜரிவாலை பார்க்கச் சென்ற எம்.எல்.ஏ. அகிலேஷ் திரிபாதியை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாகவும் ஆம் ஆத்மி கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்திருந்தது. மேலும், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நேற்று நேரடியாக விவசாயிகளை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.
தொடர்ந்து இன்று நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ள 'பாரத் பந்த்' நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.