முகப்பு
இந்தியா

ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட போராட்டக்காரர்கள் (விடியோ)

ஹரியாணாவில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போராட்டக்காரர்கள் ஆம்புலன்ஸ் ஒன்றுக்கு வழிவிட்டு பாதை அமைத்துக் கொடுத்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
கோப்புப்படம்
பகிர்:


ஹரியாணாவில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போராட்டக்காரர்கள் ஆம்புலன்ஸ் ஒன்றுக்கு வழிவிட்டு பாதை அமைத்துக் கொடுத்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியில் தொடர்ந்து 13 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு தழுவிய முழு அடைப்புக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் ஹரியாணாவில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வந்தது. அப்போது அந்த வழியில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று வர, அதை அம்பாலா-ஹிசார் நெடுஞ்சாலைப் பகுதியின் வாயிலாகக் கடப்பதற்கு போராட்டக்காரர்கள் வழி அமைத்துக் கொடுத்தனர்.

இந்த விடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவப்பட்டு வருகிறது.

முன்னதாக, முழு அடைப்புப் போராட்டத்துக்கு யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் ஆம்புலன்ஸ் போன்ற அவசர சேவைகளுக்கு தடை இல்லை என்றும் விவசாயிகள் திங்கள்கிழமை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →