முகப்பு
இந்தியா

சத்தீஸ்கர்: எல்லை பாதுகாப்புப்படை வீரர் தற்கொலை

சத்தீஸ்கரில் பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
சத்தீஸ்கர்: எல்லைப் பாதுகாப்புப்படை வீரர் தற்கொலை (கோப்புப்படம்)
பகிர்:


ராய்பூர்: சத்தீஸ்கரில் பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

எல்லை பாதுகாப்புப் படையின் 4-வது பட்டாலியன் பிரிவை சேர்ந்தவர்  ஸ்வராஜ். கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த இவர், கடந்த ஜூன் மாதம் விடுப்பில் சொந்த ஊர் சென்று, அக்டோபர் மாதம் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் கோயலிபெடா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவர் இன்று காலை 6.30 மணிக்கு தமது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இது குறித்து காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலைக் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உயிரிழந்த வீரர் கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதியடைந்து வந்ததாக காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சத்தீஸ்கரின் கான்கேர் மாவட்டத்தில் இதற்கு முன்பு மற்றொரு எல்லை பாதுகாப்புப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →