முகப்பு
இந்தியா

கோவேக்ஸின் தடுப்பூசி: வெளிநாட்டுப் பிரதிநிதிகள் 60 பேர் ஹைதராபாத் வருகை

ஹைதராபாத்தில் தயாரிக்கப்படும் கோவேக்ஸின் தடுப்பூசி குறித்து நேரடியாக ஆய்வு செய்யும் பொருட்டு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 60 பிரதிநிதிகள் புதன்கிழமை காலை ஹைதராபாத் வந்தனர். 

Updated On : 9 டிசம்பர், 2020 at 4:12 PM
கோவேக்ஸின் தடுப்பூசி
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:34 PM

ஹைதராபாத்தில் தயாரிக்கப்படும் கோவேக்ஸின் தடுப்பூசி குறித்து நேரடியாக ஆய்வு செய்யும் பொருட்டு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 60 பிரதிநிதிகள் புதன்கிழமை காலை ஹைதராபாத் வந்தனர். 

ஹைதராபாத்தில் உள்ள ஆர்ஜிஐஏ விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதிநிதிகள் ஜீனோம் பள்ளத்தாக்கிலுள்ள 'பயோலொஜிக்கல் இ' மற்றும் பாரத் பயோடெக் ஆகிய இரு நிறுவனங்களுக்குச் சென்றனர். அங்கு கரோனா தடுப்பூசி பணிகள் குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. 

ஹைதராபாத்தைத் தொடர்ந்து இந்தியாவில் மற்ற இடங்களில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் குறித்தும் அவர்கள் தெரிந்துகொள்ள இருக்கின்றனர். 

Advertisement

இந்தியாவில் ஜைகோவ்-டி, கோவிஷீல்டு, கோவேக்ஸின் ஆகிய 3 மருந்துகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.