ஜனநாயகத்திலிருந்து விடுபட மத்திய அரசு முயற்சிக்கிறது: ராகுல் காந்தி
ஜனநாயகத்திலிருந்து விடுவித்துக்கொள்ள மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்திலிருந்து விடுவித்துக்கொள்ள மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
'மோடி அரசாங்கத்தில் சீர்திருத்தம் என்பது திருட்டுக்குச் சமமானது.
அதனால்தான் மத்திய அரசு ஜனநாயகத்திலிருந்து விடுவித்துக்கொள்ள முயற்சிக்கிறது' என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, 'இந்தியாவில் கடுமையான சீர்திருத்தங்கள் என்பது மிகவும் கடினம். ஏனெனில் நம் நாடு ஜனநாயகத் தன்மை அதிகம் கொண்ட நாடு. ஆனால், அரசியல் மூலமாகவே சுரங்க, நிலக்கரி, தொழிலாளர், வேளாண்மை போன்ற சீர்திருத்தங்களை நிறைவேற்றப்பட்ட நிலையில் மேலும் சில சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டியுள்ளன' என்று நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக ராகுல் காந்தி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.