மத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறாது: விவசாய சங்கம்
வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறாது என்று அகில இந்திய கிஸான் சபையின் பொதுச்செயலாளர் ஹன்னான் முல்லா தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறாது என்று அகில இந்திய கிஸான் சபையின் பொதுச்செயலாளர் ஹன்னான் முல்லா தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்கள் தொடர்பாக சில திருத்தங்களை வழங்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாகவும், அது குறித்து ஆலோசனை நடத்திய பிறகே மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் கூறினார்.
வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கத் தலைவர்களுக்கும் இடையில் இதுவரை ஐந்து கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
இன்று (புதன்கிழமை) 6-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறயிருந்த நிலையில், நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட அமைச்சர்கள், சில முக்கிய விவசாய சங்கத் தலைவர்களுடன் அவசர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறாது என்றும், சில திருத்தங்களை மேற்கொள்வதாகவும், அதனை எழுத்துப்பூர்வமாக அளிப்பதாகவும் அமைச்சர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து பேச்சுவார்த்தையை புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெறாது என்று அகில இந்திய கிஸான் சபையின் பொதுச்செயலாளர் ஹன்னான் முல்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, வேளாண் சட்டங்கள் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக சில திருத்தங்களை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனை நாங்கள் பார்வையிட வேண்டும். இன்று பிற்பகல் நாங்கள் எங்களுக்குள் ஆலோசனை நடத்தவுள்ளோம்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதில் தெளிவாகவுள்ளோம். அவர்களின் எழுத்துப்பூர்வ திருத்தங்கள் குறித்து ஆலோசித்து, மத்திய அரசுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறினார்.