விவசாயிகளின் ஏழ்மைக்கு எதிர்க்கட்சிகளே காரணம்: சிவராஜ் சிங் செளகான்
விவசாயிகளின் ஏழ்மை நிலைக்கு எதிர்க்கட்சிகளே காரணம் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிவசாயிகளின் ஏழ்மைக்கு எதிர்க்கட்சிகளே காரணம்: சிவராஜ் சிங் செளகான்
விவசாயிகளின் ஏழ்மை நிலைக்கு எதிர்க்கட்சிகளே காரணம் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் ஏழ்மை நிலைக்கு எதிர்க்கட்சிகளே காரணம் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே பிரதமர் நரேந்திர மோடியின் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்தியப்பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் நமது கடவுளைப் போன்றவர்கள். அவர்களது வருவாயை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதே பிரதமரின் நோக்கம். அதற்கான முயற்சியாக வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று கூறினார்.
இதற்கு முன்பு ஆட்சி செய்தவர்கள் விவசாயிகளுக்காக எதையும் செய்யவில்லை. விவசாயிகளை அவர்கள் திவாலாக்கியதாகக் குறிப்பிட்டார்.
மக்கள் அவர்களை புறக்கணித்துள்ளனர். விவசாயிகளும் அவர்களை துக்கியெறிந்துள்ளனர். விவசாயிகளின் ஏழ்மை நிலைக்கு எதிர்க்கட்சிகளே காரணம். விவசாயிகளிடம் அவர்கள் மன்னிப்பு கோர வேண்டும். மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தற்போது நலம் விரும்பிபோல் செயல்படுகின்றனர் என்று தெரிவித்தார்.