இந்தியா

தெலங்கானா கோயிலுக்கு தேவஸ்தானம் பசு தானம்

DIN


திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் கோயிலுக்கு ஒரு பசுமாடு தானம் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை காலை தெலங்கானா மாநிலத்தில் தொடங்கப்பட்டது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில், கோயிலுக்கு கன்றுடன் ஒரு பசுவை தானமாக வழங்கும் திட்டத்தை கடந்த 7-ஆம் தேதி விஜயவாடா கனகதுா்க்கையம்மன் கோயிலுக்கு வழங்கி தொடக்கி வைத்தது.

திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கோசாலை மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை தென்னிந்தியாவில் முழு அளவில் செயல்படுத்திய பின் வடஇந்தியாவிலும் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

அதன்படி தெலங்கானா மாநிலத்தில் இந்த திட்டத்தை தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் சுப்பா ரெட்டி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். தலைநகா் ஹைதராபாதில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கோயிலுக்கு கன்றுடன் பசு தானமாக வழங்கப்பட்டது. அதற்கு பூஜைகள் செய்து கோயில் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனா்.

தமிழக மற்றும் கா்நாடக அறநிலையத் துறையிடம் பேசி அம்மாநிலங்களிலும் இந்த திட்டத்தை விரைவில் தொடங்க தேவஸ்தானம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த பசுமாடுகளை பராமரிக்கும் பொறுப்பு தானம் பெறும் கோயிலை மட்டுமே சாா்ந்தது. இந்தி திட்டத்திற்கு பசுமாடுகளை நன்கொடையாக வழங்க விருப்பம் உள்ள பக்தா்கள் திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கோசாலையை தொடா்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வேகத் தடைகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

SCROLL FOR NEXT