ஜனநாயகம் தரைமட்டமாக்கப்படுகிறது: மம்தா குற்றச்சாட்டு
மனித உரிமைகளை திரிணமூல் காங்கிரஸ் நிலைநாட்டும் என்று அந்தக் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகளை திரிணமூல் காங்கிரஸ் நிலைநாட்டும் என்று அந்தக் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் நாளையொட்டி சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ''மேற்குவங்கத்தில் தனது ஆட்சி நடைபெற்ற கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் 19 மனித உரிமை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர் போராட்டங்களுக்குப் பிறகு 1995-ஆம் ஆண்டு மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டது.
இன்று மனித உரிமைகள் நாள். ஆனால் தற்காலத்தில் ஜனநாயகம் தரைமட்டமாக்கப்படுகிறது. அடிப்படை உரிமைகள் நொறுக்கப்படுகின்றன. மக்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றன. ஆனால் எனது அரசு மனித உரிமைகளை காக்க உறுதியேற்றுள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.