‘என்னிடம் கணக்கு கேட்பதற்கு முன் பி.எம். கேர் நிதிக் கணக்கைத் தாருங்கள்’: மம்தா
மேற்கு வங்கத்திற்கான மத்திய அரசின் நிதிக் கணக்கைக் கேட்பதற்கு முன் பி.எம். கேர் நிதியின் கணக்கை வெளியிடுங்கள் என பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் விமர்சனத்திற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பதிலளித்துள்ளார்.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா 2 நாள் பயணமாக மேற்கு வங்கம் சென்றுள்ளார். பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட நட்டா ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விமர்சித்துப் பேசினார்.
மேற்கு வங்கத்தில் ஊழல் நிலவி வருவதாகத் தெரிவித்த நட்டா, மத்திய அரசால் வழங்கப்பட்ட ரூ.1000 கோடிக்கு உரிய கணக்கு வரவில்லை எனவும் மத்திய அரசின் கேள்விகளுக்கு பயந்து அவர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் மம்தா பானர்ஜி, “ பாஜகவினருக்கு வேறு வேலை இல்லை. தற்போது நட்டா வந்துள்ளார். என்னிடம் மத்திய அரசின் நிதி குறித்து கணக்கு கேட்பதற்கு முன்பாக பி.எம். கேர் நிதி குறித்த கணக்கை வழங்குங்கள்” என தெரிவித்தார்.