முகப்பு
இந்தியா

கேரளம்: 2-ம் கட்ட உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு நிலவரம்

கேரளத்தில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் பிற்பகல் நிலவரப்படி 43 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

கேரளத்தில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் பிற்பகல் நிலவரப்படி 43 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 
கேரள மாநிலம் முழுவதும் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகின்றது. 
ஏற்கெனவே 8ஆம் முதற்கட்ட தேர்தல் நடந்து முடிவடைந்த நிலையில் 2-ம் கட்டமாக எர்ணாக்குளம், கோட்டயம், திருச்சூர், பாலக்காடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. ஆரம்பத்தில் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
அதில் பிற்பகல் 12.10 மணி நிலவரப்படி 43 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக வயநாடு மாவட்டத்தில் 45.17 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 
மேலும் எர்ணாகுளம் 42.98, கோட்டயம் 43.50, திருச்சூர் 43.13, பாலக்காடு 43.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவடைகிறது. இறுதிகட்ட உள்ளாட்சித் தேர்தல் டிச.14ஆம் தேதியும் அதனைத் தொடர்ந்து டிச.15ஆம் தேதி முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன. 
 

முழு கட்டுரையைப் படிக்க →