முகப்பு
மாங்காய் திருடியதாக வழக்கு: 12 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு (கோப்புப்படம்)
இந்தியா

மாங்காய் திருடியதாக வழக்கு: 12 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு

உத்தரப்பிரதேசத்தில் மாங்காய் திருடியதாக தொடரப்பட்ட வழக்கில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா

மாங்காய் திருடியதாக வழக்கு: 12 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு

உத்தரப்பிரதேசத்தில் மாங்காய் திருடியதாக தொடரப்பட்ட வழக்கில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
மாங்காய் திருடியதாக வழக்கு: 12 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு (கோப்புப்படம்)
பகிர்:

உத்தரப்பிரதேசத்தில் மாங்காய் திருடியதாக தொடரப்பட்ட வழக்கில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தோட்டத்தில் புகுந்து மாங்காய் திருடியதாகவும், கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னெள பகுதியில் கடந்த 2008-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தோட்டத்தில் புகுந்து மாங்காய் திருடியதாக ஃபரித் பிண்டாரி, ஹாசிப் அப்துல் ராய்ஸ் ஆகிய இருவர் மீது ராஷித் அலி பெக் என்பவர் புகாரளித்தார்.

மாங்காய் திருடிச் சென்றபோது தடுக்க முயன்ற என்னை கொலை செய்ய முயன்றதாகவும் மலிஹாபாத் காவல் நிலையத்தில் ராஷித் அலி புகாரளித்துள்ளார். 

இது தொடர்பாக இருவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும்போது குற்றம் சாட்டப்பட்ட இருவரில் ஹாசிப் அப்துல் என்பவர் உயிரிழந்தார். இதனால் அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை விசாரித்துவந்த கூடுதல் அமர்வு நீதிபதி பி.சி.குஷ்வாலா, குற்றம் சாட்டப்பட்ட ஃபரித் பிண்டாரி நிரபராதி என்று தீர்ப்பளித்தார்.

தோட்டத்தில் மாங்காய் திருடியதற்கும், கொலை முயற்சியில் ஈடுபட்டதற்கும் எந்தவித ஆதாரங்களும் சமர்ப்பிக்காததால் நீதிமன்றம் நிரபராதி என்று தீர்ப்பளித்துள்ளது.

இது குறித்த துணை ஆய்வாளர் விசாரணை அறிக்கையிலும், கொலை முயற்சியில் ஈடுபடும் வகையில் துப்பாக்கிச்சூடு எதுவும் நடைபெறவில்லை என்றும், மாங்காய் திருடியதற்கும் ஆதாரம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனிப்பட்ட பகையின் காரணமாகவே புகாரளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
முழு கட்டுரையைப் படிக்க →