ஜார்க்கண்டில் கணவரை மிரட்டி, மனைவியை பலாத்காரம் செய்த 17 பேர் 
இந்தியா

ஜார்க்கண்டில் கணவரை மிரட்டி, மனைவியை பலாத்காரம் செய்த 17 பேர்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சந்தையிலிருந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில் 17 பேர் கொண்ட கும்பல் கணவரை பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டி, மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் நடந்துள்ளது.

ENS


ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சந்தையிலிருந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில் 17 பேர் கொண்ட கும்பல் கணவரை பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டி, மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் நடந்துள்ளது.

இது குறித்து காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தம்பதி கொடுத்த புகாரில், இருவரும் சந்தையிலிருந்து இரவு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, ஆளில்லாத பகுதியில் பதுங்கியிருந்த ஐந்து பேர், மனைவியை புதர் பகுதிக்கு இழுத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர். மற்றவர்கள் கணவரை பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டியுள்ளனர். 

புகாரில் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், 16 பேரை தேடும் பணி நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஐந்து குழந்தைகளுக்குத் தாயான அப்பெண் கொடுத்த புகாரில் 17 பேர் தன்னை பலாத்காரம் செய்ததாகக் கூறியுள்ளார். புகார் உறுதி செய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

35 வயது மதிக்கத்தக்க அப்பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

SCROLL FOR NEXT