முகப்பு
இந்தியா

உ.பி.: குழி வெட்டியதில் இருதரப்பினரிடையே மோதல்; ஒருவர் பலி

உத்தரப்பிரதேசத்தில் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

உத்தரப்பிரதேசத்தில் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் டோரியா பகுதியில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான ராமையன் பாரி அண்டை வீட்டின் சுற்றுச்சுவர் அருகே குழி தோண்டியுள்ளார்.

இதனை வீட்டு உரிமையாளரான 65 வயதான ஹரிசங்கர் குப்தா தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி தனது உறவினர்களுடன் இணைந்து, குப்தாவை தாக்க ஆரம்பித்துள்ளார்.

இதனைத் தடுத்து குப்தாவை காக்க வந்த மேலும் 5 பேரையும், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி லத்தியால் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த குப்தா உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சாலைமறியலிலும் ஈடுபட்டனர். இதனால் மயேல் - பரதா சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பதற்றத்தை தணிக்கும் வகையில் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்ட 11 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →