குஜராத்: பணி புறக்கணிப்பு போராட்டத்தில் 30,000 மருத்துவர்கள்
நாடு முழுவதும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் குஜராத்தில் 30,000 மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் குஜராத்தில் 30,000 மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று மத்திய அரசு கடந்த நவ மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதுவரை அலோபதி மருத்துவர்கள் செய்து வந்த அறுவை சிகிச்சைகளை 3 ஆண்டுகள் முதுநிலை பயின்ற ஆயுர்வேத மருத்துவர்களும் இனி செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு ஆயுர்வேத மருத்துவர்களிடையே வரவேற்பை பெற்றாலும், இந்திய மருத்துவ சங்கம் உள்பட பெரும்பாலான மருத்துவர்கள் இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து நாடு முழுவதும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மருத்துவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் குஜராத்தில் 30,000 மருத்துவர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆமதபாத்தில் மட்டும் 9,000 பேர் பங்கேற்றுள்ளனர்.
எனினும் அவசர சிகிச்சைப் பிரிவு, விபத்து, அவசர அறுவை சிகிச்சைகள், தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் முக்கியமான பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக குஜராத் பிரிவின் இந்திய மருத்துவ சங்க பொதுச்செயலாளர் கமலேஷ் சைனி தெரிவித்துள்ளார்.