முகப்பு
விவசாயிகளின் போராட்டத்துக்குப் பின்னணி யார்? ஊடகங்களை விசாரிக்கச் சொல்லும் மத்திய அமைச்சர்
இந்தியா

விவசாயிகளின் போராட்டத்துக்குப் பின்னணி யார்? ஊடகங்களை விசாரிக்கச் சொல்லும் மத்திய அமைச்சர்

தலைநகர் தில்லியின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் குவிந்து வரும் விவசாயிகளின் போராட்டத்துக்குப் பின்னால் வேறு ஏதேனும் சக்தியின் தூண்டுதல் இருக்கிறதா?

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
விவசாயிகளின் போராட்டத்துக்குப் பின்னணி யார்? ஊடகங்களை விசாரிக்கச் சொல்லும் மத்திய அமைச்சர்
பகிர்:

புது தில்லி: தலைநகர் தில்லியின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் குவிந்து வரும் விவசாயிகளின் போராட்டத்துக்குப் பின்னால் வேறு ஏதேனும் சக்தியின் தூண்டுதல் இருக்கிறதா? இருந்தால் அது எது என்று வெளிச்சத்துக்குக் கொண்டு வருமாறு மத்திய அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இணைந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தனர்.

மத்திய அரசு ஏற்கனவே வேளாண் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான பரிந்துரையை அனுப்பி வைத்துவிட்டது. ஆனால் தற்போது அந்த பரிந்துரைகளை விவசாய சங்கங்கள் நிராகரித்துள்ளன. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். அதேவேளையில் அடுத்து வரும் நாள்களில் போராட்டம் தீவிரம்பிடிக்கும் என்றும், தில்லிக்கு வரும் தேசிய நெடுஞ்சாலைகள் முடக்கப்படும் என்றும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர் என்று அமைச்சர்கள் கூறினர்.

அப்போது, மத்திய அமைச்சர் தோமரிடம், விவசாயிகளின் போராட்டத்துக்குப் பின்னால் வேறு ஏதேனும் சக்தி இருக்கிறது என்று நினைக்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஊடகங்களின் கண்கள் மிகவும் கூர்மையானவை. எனவே, அதுபற்றி கண்டுபிடிக்கும் பொறுப்பை அவர்களிடமே விட்டுவிடுகிறேன் என்று தெரிவித்தார்.

மேலும், ஊடகங்கள் தங்களது புலனாய்வு திறனைப் பயன்படுத்தி, இந்த போராட்டத்துக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும் என்று அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

அதேவேளையில், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசின் கதவுகள் எப்போதும் திறந்தே இருப்பதாகவும் அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

மத்திய அமைச்சர்களின் இந்தக் குற்றச்சாட்டை விவசாயிகள் சங்கத்தினர் மறுத்துள்ளனர். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட போராட்டம் என்று கூறியிருக்கிறார்கள்.
 
முழு கட்டுரையைப் படிக்க →