முகப்பு
இந்தியா

கரோனாவிற்கு சிகிச்சை: ஆந்திரத்தில் 5 ஆயிரம் பேராக குறைவு

ஆந்திரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

Updated On : 12 டிசம்பர், 2020 at 7:08 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:36 PM

ஆந்திரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் காணப்படுகிறது. அந்தவகையில் ஆந்திரத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 510 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 8,75,025-ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8,62,895-ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்தமாக கரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 7,052-ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திரத்தில் 13 மாவட்டங்களிலும் 100-க்கும் கீழ் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சித்தூரில் 89 பேருக்கும், கிருஷ்ணாவில் 82 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.