முகப்பு
விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு: ஆந்திரம், ஒடிசாவில் போராட்டம்
இந்தியா

விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு: ஆந்திரம், ஒடிசாவில் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆந்திரம், ஒடிசா ஆகிய  மாநிலங்களில்  ஏராளமானோர்  போராட்டத்தில்  ஈடுபட்டனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு: ஆந்திரம், ஒடிசாவில் போராட்டம்
பகிர்:

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆந்திரம், ஒடிசா ஆகிய  மாநிலங்களில்  ஏராளமானோர்  போராட்டத்தில்  ஈடுபட்டனர். 

அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஏராளமான விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகளும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்த சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவாசாயிகள் தில்லி நோக்கி பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு அளித்த வரைவு அறிக்கையையும் நிராகரித்து, 3 சட்டங்களையும் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

அவர்களுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து விவசாயிகள் ஆதரவு தெரிவித்து தில்லி நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளனர். அந்தவகையில் ஆந்திரம் மற்றும் ஒடிசா மாநிலத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது.

ஒடிசாவின் புரி பகுதியில் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஏராளமான விவசாய சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோன்று ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

முழு கட்டுரையைப் படிக்க →