கரோனா நோயாளிக்கு புது நுரையீரல், புதுவாழ்வு கொடுத்த ஹைதராபாத் மருத்துவர்கள் 
இந்தியா

கரோனா நோயாளிக்கு புது நுரையீரல், புதுவாழ்வு கொடுத்த ஹைதராபாத் மருத்துவர்கள்

கரோனா தொற்றால், நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு புது வாழ்வு கொடுத்துள்ளனர் ஹைதராபாத் மருத்துவர்கள்.

ENS


ஹைதராபாத்: கரோனா தொற்றால், நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு புது வாழ்வு கொடுத்துள்ளனர் ஹைதராபாத் மருத்துவர்கள்.

ஹரியாணாவைச் சேர்ந்த 34 வயது இளைஞர், தில்லியில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவரது நிலைமை மோசமடைந்து, கரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 53 நாள்கள் செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வந்தார். 

ஆனால் அவரது நிலைமை சீரடையாததால், அவர் ஹைதராபாத்துக்குக் கொண்டு வரப்பட்டார். அவரது நுரையீரல் முற்றிலும் சேதமடைந்துவிட்டதால், அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியமானதை மருத்துவர்கள் உணர்ந்தனர்.

ரத்த நாளங்களிலும் கரோனா தொற்று பாதித்திருந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்வது பெரும் சிக்கலாக இருந்தது.

பொதுவாகவே, நுரையீரல் பாதிக்கப்படும் கரோனா நோயாளிகள், மாற்று நுரையீரல் கிடைப்பதற்குள் தொற்று பாதிப்பால் மரணமடைந்து விடுகிறார்கள். ஆனால், இந்த நோயாளியைப் பொறுத்தவரை, மாற்று நுரையீரல் கிடைப்பதற்குள் அவர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டார்.

அவருக்கு வெற்றிகரமாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு தற்போது குணமடைந்து வருவதாக மருத்துவர் சந்தீப் அட்டாவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT