முகப்பு
சிங்கு எல்லையில் விவசாயிகள் போராட்டம்
இந்தியா

சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது: விவசாயிகள்

​மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார், ஆனால் முதலில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்வது குறித்தே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா

சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது: விவசாயிகள்

​மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார், ஆனால் முதலில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்வது குறித்தே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
சிங்கு எல்லையில் விவசாயிகள் போராட்டம்
பகிர்:


மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார், ஆனால் முதலில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்வது குறித்தே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் சிங்கு எல்லையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது விவசாயத் தலைவர் கன்வால்பிரீத் சிங் தெரிவித்ததாவது: 

"ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஆயிரக்கணக்கான விவசாயிகள் ராஜஸ்தானின் ஷாஜகான்பூரிலிருந்து ஜெய்ப்பூர் வழியாக தில்லிக்கு பேரணியைத் தொடங்குகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள விவசாயிகளும் போராட்டத்தில் பங்கெடுக்க வந்துகொண்டிருக்கின்றனர். வரும் நாள்களில் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவுள்ளோம்.

அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றால், நாங்கள் தயார். ஆனால், எங்களது முக்கியக் கோரிக்கையான 3 சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது. இதன்பிறகே, நாங்கள் மற்ற கோரிக்கைகள் நோக்கி நகர்வோம்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கத் தலைவர்கள் டிசம்பர் 14-ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். போராட்டத்தை வலுவிழக்கச் செய்ய அரசு முயற்சிக்கிறது. ஆனால், விவசாயிகள் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்."

முழு கட்டுரையைப் படிக்க →