முகப்பு
இந்தியா

கேரள முதல்வரின் இலவச தடுப்பூசி அறிவிப்பு: தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்

​உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் கரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று கேரள முதல்வர் அறிவித்திருப்பது தேர்தல் நடத்தை விதிமீறல் என கேரள பாஜக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
கேரள முதல்வர் பினராயி விஜயன் (கோப்புப்படம்)
பகிர்:


உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் கரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று கேரள முதல்வர் அறிவித்திருப்பது தேர்தல் நடத்தை விதிமீறல் என கேரள பாஜக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.

இதுபற்றி கேரள பாஜக தலைவர் கே. சுரேந்திரன்  செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:

"கரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என பினராயி விஜயன் அறிவித்ததன்மூலம், அவர் தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது. மத்திய அரசு திட்டத்தின் பாராட்டுகளை எடுத்துக்கொள்ள கேரள முதல்வர் முயற்சிக்கிறார்."

முன்னதாக, கேரளத்தில் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படும் என முதல்வர் பினராயி விஜயன் சனிக்கிழமை அறிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →