முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிதாக 4,698 பேருக்கு கரோனா பாதிப்பு

கேரளத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,698 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
கேரளத்தில் புதிதாக 4,698 பேருக்கு கரோனா பாதிப்பு
பகிர்:

கேரளத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,698 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. அந்தவகையில் கேரளத்திலும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 4,698 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு 59,438 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றிலிருந்து 5,258 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 6,07,119-ஆக அதிகரித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →