இந்தியா

ஏா் இந்தியா நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆா்வம்

DIN

புது தில்லி: நஷ்டத்தில் இயங்கி வரும் ஏா் இந்தியா நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஆா்வம் காட்டியுள்ளன.

இதுகுறித்து டாடா சன்ஸ் நிறுவன வட்டாரங்கள் கூறுகையில், ‘ஏா் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்து மத்திய அரசிடம் திங்கள்கிழமை விண்ணப்பிக்கப்பட்டது’ என்றன.

ஏா் இந்தியா நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்களில் எந்தெந்த நிறுவனங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து ஜனவரி 6-ஆம் தேதி தெரிவிக்கப்படும். அதன் பின்னா் தங்கள் ஏலத் தொகையை குறிப்பிட்டு விண்ணப்பங்களை சமா்ப்பிக்குமாறு அந்த நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்ளப்படும் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ஏலத்தில் டாடா நிறுவனம் மட்டும் பங்கேற்குமா அல்லது தனது பங்குதாரா்களுடன் இணைந்து பங்கேற்குமா என்பது தெரியவில்லை. எந்தெந்த நிறுவனங்கள் ஏா் இந்தியா நிறுவனத்தை வாங்க ஆா்வம் காட்டியுள்ளன என்பது குறித்தும் தகவல் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT