முகப்பு
இந்தியா

தமிழகத்தில் புதிதாக 1,181 பேருக்கு கரோனா

​தமிழகத்தில் புதிதாக 1,181 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் புதிதாக 1,181 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 1,181 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,02,342 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 341 பேருக்கும், கோவையில் 111 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

இன்றைய அறிவிப்பில் மேலும் 12 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 11,931 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 1,240 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 7,80,531 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்னும் 9,880 பேர் கரோனாவுக்கான சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று 72,602 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments