முகப்பு
வணிகம்

ஈரான் போரால், ஊட்டச்சத்து நிறைந்த மக்கானாவுக்கு வந்த நிலை?

ஈரான் போரால், ஊட்டச்சத்து நிறைந்த மக்கானா ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது பற்றி..

Updated On : 9 ஏப்ரல், 2026 at 6:54 AM
மக்கானா - ENS
பகிர்:

அண்மைக்காலமாக மக்களிடையே அதிகம் பயன்படுத்தப்படும் ஊட்டச்சத்து நிறைந்த தாமரை விதைகள், ஏற்றுமதி ஈரான் போரால் கடும் பின்னடைவை சந்தித்துள்ளனவாம்.

ஈரான் போரால், பல்வேறு ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதில் மக்கானா ஏற்றுமதியும் ஒன்றாகியிருக்கிறது. மக்கானா தேவை குறைந்து, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 500 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக பிகார் மாநில வணிகர்கள் கூறுகிறார்கள்.

ஈரான் போர் காரணமாக ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதால், வெறும் பெட்ரோல், டீசல்தான் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்க வேண்டாம். பல ஏற்றுமதி ஆர்டர்கள் ரத்தாகி, மக்கானா ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கானா உற்பத்தியாளர்களுக்கு ரூ.500 கோடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.

Advertisement

தற்போது, பிகாரிலிருந்து மக்கானா, அரிசி மற்றும் காய்கறிகள் பெரிய அளவில் ஏற்றுமதி நடைபெறாமல் நிறுத்தப்பட்டுள்ளது. நிலைமை சீரடைந்தால் ஏற்றுமதி தொடங்கும் என்ற நம்பிக்கையோடு வர்த்தகர்கள் உள்ளனர். பிகாரிலிருந்து பெரும்பாலான பொருள்கள் மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரக நாடுகள், கத்தார் போன்றவற்றுக்கு மக்கானா அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட வருகிறது. இது பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments