முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் அதிகரிக்கும் கரோனா

கர்நாடகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,240 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
கோப்புப்படம்
பகிர்:

கர்நாடகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,240 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் கர்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,240 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,04,665-ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

புதிதாக 1,403 பேர் குணமடைந்ததால், இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை  8,77,199-ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகத்தில் புதிதாக 6 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,971-ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments