முகப்பு
இந்தியா

ஐஎஸ் பயங்கரவாதிக்கு 7 ஆண்டுகள் சிறை: தில்லி நீதிமன்றம்

இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக கைதான ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

Updated On : 17 டிசம்பர், 2020 at 5:06 AM
தில்லி உயா்நீதிமன்றம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:38 PM


புது தில்லி: இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக கைதான ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 
வெளிநாட்டைச் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முகம்மது நசீர் பக்கீர் என்பவர் இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட சதித் திட்டம் மேற்கொண்டதாக தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர். 
தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளரான இவர், சூடான் குடியரசில் இருந்து நாடு கடத்தப்பட்டு, இந்த வழக்கில் 2015, டிசம்பர் 11}ஆம் தேதி தேசியப் புலனாய்வு முகமை போலீஸôரால் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து செல்லிடப்பேசி, மடிக்கணினி, கையால் எழுதப்பட்ட சீட்டுகள் ஆகியவை மீட்கப்பட்டன.
இவர் மீதான வழக்கு தில்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிமன்ற விசாரணையின்போது, தேசியப் புலனாய்வு முகமையின் தரப்பில், "இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஐஎஸ் பயங்கரவாதிகள் தங்களது அமைப்புக்கு இந்தியாவைச் சேர்ந்த வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களையும் ஆள் சேர்க்க பெரும் சதித் திட்டத்தில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. அத்தகைய கூட்டாளிகளின் அடையாளம் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முகம்மது நசீரிடம் விசாரணையின்போது, ஐஎஸ் அமைப்பில் உள்ள சில உறுப்பினர்கள், அனுதாபிகளின் பெயர்கள் மற்றும் செல்லிடப்பேசி எண்களைக் கூறினார். அவர்களை அடையாளம் காண விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' எனத் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பர்வீன் சிங் புதன்கிழமை நசீருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்ததாகவும், குற்றச் சதி, பயங்கரவாதச் செயலில் ஈடுபட சதி, பயங்கரவாதச் செயலுக்கு ஆள்சேர்ப்பு, பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருப்பது, பயங்கரவாத அமைப்பை ஆதரிப்பது ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் இந்தத் தண்டனை வழங்கப்பட்டதாகவும் அவரது வழக்குரைஞர் காசர் கான் தெரிவித்தார். நசீர் தனது குற்றத்தைக் ஒப்புக்கொண்டு, தண்டனையைக் குறைக்குமாறு நீதிமன்றத்தில் முறையிட்டதாகவும் அவரது வழக்குரைஞர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.