சட்டீஸ்கரில் முதல் முறை: மோப்ப நாய்க்கு சிறந்த காவலர் விருது
சட்டீஸ்கர் மாநிலத்தில் முதல் முறையாக, இந்த மாதத்தின் சிறந்த காவலர் என்ற விருதை மோப்ப நாய் ரூபி பெற்றுள்ளது.
இந்தியாசட்டீஸ்கரில் முதல் முறை: மோப்ப நாய்க்கு சிறந்த காவலர் விருது
சட்டீஸ்கர் மாநிலத்தில் முதல் முறையாக, இந்த மாதத்தின் சிறந்த காவலர் என்ற விருதை மோப்ப நாய் ரூபி பெற்றுள்ளது.
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் முதல் முறையாக, இந்த மாதத்தின் சிறந்த காவலர் என்ற விருதை மோப்ப நாய் ரூபி பெற்றுள்ளது.
பெல்ஜியன் ஷெப்பர்ட் வகை பெண் நாய், மோப்ப சக்தியின் உதவியோடு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க பயிற்சி பெற்றுள்ளது. இது இந்த மாதத்தின் சிறந்த காவலர் என்ற விருதை அதன் பயிற்சியாளருடன் சேர்ந்து பெற்றுள்ளது.
முதல் முறையாக ஒரு மோப்ப நாய்க்கு சிறந்த காவலர் விருது வழங்கப்பட்டுள்ளது. ரூபி, பல முக்கிய குற்றங்களில், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க பேருதவியாக இருந்துள்ளது.
நான்கு வயதாகும் ரூபி மற்றும் அதன் பயிற்சியாளர் தலைமைக் காவலர் விரேந்திர ஆனந்தை, பல வழக்குகளில் துப்பு துலங்க காவல்துறையினர் அணுகுவது உண்டு. ஆனால் இந்த முறைதான் முதல் முறையாக மோப்ப நாய்க்கு சிறந்த காவலர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது என்று ராய்கார் காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் சிங் கூறியுள்ளார்.
சட்டீஸ்கர் காவல்துறையில், சிறப்பாக பணியாற்றும் காவலர்கள் கண்டறிந்து மாதந்தோறும் விருது வழங்கி கௌரவிக்கும் நடைமுறை சமீபத்தில் தொடங்கியது. இவ்வாறு விருது பெறும் காவலர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும், மாநிலத்தின் அனைத்து காவல்நிலையங்களிலும் அவர்களது புகைப்படம் ஒட்டப்பட்டு, சிறந்த காவலர் என்ற விருது பெற்றதற்கான தகவல்கள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.