முகப்பு
இந்தியா

பெங்களூருவில் பெண் காவல் அதிகாரி தூக்கிட்டுத் தற்கொலை

பெங்களூருவில் பெண் காவல் அதிகாரி ஒருவர் தற்கொலை  செய்து கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 17 டிசம்பர், 2020 at 3:53 PM
கோப்புப்படம்
பகிர்:

பெங்களூருவில் பெண் காவல் அதிகாரி ஒருவர் தற்கொலை  செய்து கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகர குற்றவியல் புலனாய்வுத் துறையில் காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் லட்சுமி. இவர் 2014 ஆம் ஆண்டு  தேர்ச்சி பெற்று காவல் பணியில் இணைந்தார்.

நேற்று இரவு அவர் பெங்களூரு அன்னபூரணேஸ்வரி நகரில் உள்ள தன் நண்பர்கள் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இரவு சாப்பிடுவதற்கு சென்ற அவர் அறைக்குள் சென்று வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த நண்பர்கள் கதவை உடைத்து பார்த்தபோது அவர் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது. பின்னர் காவல்துறைக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்து அவர்கள் வந்து லட்சுமியின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  

Advertisement

இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லட்சுமியின் நண்பர்கள் நால்வரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அவர் பணிச்சுமை காரணமாக ஏற்கெனவே ஒருமுறை தற்கொலைக்கு முயன்றதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். 8 வருடங்களுக்கு முன்னதாக அவருக்கு திருமணம் நடந்துள்ளது. 

இதுகுறித்து காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்த கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.