இந்தியா

வெங்காயம் இறக்குமதிக்கான விதிமுறைகள் தளா்வு ஜன.31 வரை நீட்டிப்பு

DIN


புது தில்லி: வெங்காயம் இறக்குமதிக்கான விதிமுறை தளா்வுகளை அடுத்தாண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை அதிகளவில் இறக்குமதி செய்வதற்காக 2020 டிசம்பா் 15 வரையில் அதற்கான விதிமுறைகளில் தளா்வு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பொதுமக்கள் நலன் கருதி உள்நாட்டு சந்தைகளில் வெங்காயத்தின் இருப்பை அதிகரிக்கவும், விலையை கட்டுப்படுத்தவும் வேளாண் அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

எனவே, வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகளில் அறிவிக்கப்பட்ட தளா்வு 2021 ஜனவரி 31 வரையில் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை அக்டோபரில் ரூ.65-ரூ70-ஆக காணப்பட்ட நிலையில், அரசு எடுத்த நடவடிக்கைகளால் வியாழக்கிழமை நிலவரப்படி ரூ.40-க்கும் கீழ் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT