அட்டாரி எல்லையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
அட்டாரி எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
அட்டாரி எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியான பஞ்சாபின் அட்டாரி எல்லை வழியாக இன்று அதிகாலை 2.30 மணியளவில் பயங்கரவாதிகள் சிலர் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றனர். அப்போது எல்லையில் பாதுகாப்புக்கு நின்றிருந்த பாதுகாப்புப்படையினர் அவர்களை எச்சரித்தனர்.
ஆனால் அவர்கள் திடீரென, பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு இந்திய தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சம்பத்தை தொடர்ந்து எல்லையில் பஞ்சாப் காவலர்களுடன் இணைந்து பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.