முகப்பு
இந்தியா

குறைந்தபட்ச ஆதார விலையை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை: பிரதமர் மோடி

விவசாய விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் எனவும், குறைந்தபட்ச ஆதார விலையை நீக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

Updated On : 18 டிசம்பர், 2020 at 2:59 PM
குறைந்தபட்ச ஆதார விலையை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை: பிரதமர் மோடி
பகிர்:


புது தில்லி: விவசாய விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் எனவும், குறைந்தபட்ச ஆதார விலையை நீக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

குறைந்தபட்ச ஆதார விலை நீக்கப்பட்டால் எப்படி ஆண்டுக்காண்டு விலை உயர்வு அறிவிக்கப்படுகிறது என்றும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து மத்திய பிரதேச விவசாயிகளிடையே பிரதமா் நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, விவசாயிகள் நலனுக்காக தாங்கள் கொண்டு வந்துள்ள சீர்திருத்தங்களைக் கண்டு எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன. விவசாயிகளின் போராட்டம் மூலம் வாக்கு வங்கி அரசியல் நடத்தும் கட்சிகளை பொதுமக்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதை எதிர்க்கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

விவசாயிகளின் நலனுக்காக சுவாமிநாதன் குழு அளித்த பரிந்துரைகளை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

மேலும், எதிர்க்கட்சியினருக்கு வேளாண் மசோதாக்களில் எல்லாம் எந்த பிரச்னையும் இல்லை, அவர்களுக்கு மோடியுடன்தான் பிரச்னை என்று எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கிப் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.