முகப்பு
12 மணி நேர வேலை, வழங்கப்படாத ஊதியம்: சூறையாடப்பட்ட ஐபோன் நிறுவன விசாரணையில் தகவல்
இந்தியா

12 மணி நேர வேலை, வழங்கப்படாத ஊதியம்: சூறையாடப்பட்ட ஐபோன் நிறுவன விசாரணையில் தகவல்

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள விஸ்ட்ரான் நிறுவனத்தின் ஆப்பிள் ஐபோன் செல்லிடப்பேசி உற்பத்தி நிறுவனத்தில் ஊழியர்களை 12 மணி நேரம் வேலை வாங்கியதும், பல மாதங்கள் ஊதியம் வழங்கப்படாததும் அரசு தரப்பில் நடத்த

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
12 மணி நேர வேலை, வழங்கப்படாத ஊதியம்: சூறையாடப்பட்ட ஐபோன் நிறுவன விசாரணையில் தகவல்
பகிர்:

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள விஸ்ட்ரான் நிறுவனத்தின் ஆப்பிள் ஐபோன் செல்லிடப்பேசி உற்பத்தி நிறுவனத்தில் ஊழியர்களை 12 மணி நேரம் வேலை வாங்கியதும், பல மாதங்கள் ஊதியம் வழங்கப்படாததும் அரசு தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், உற்பத்தி தொழிற்சாலையில் கடைபிடிக்க வேண்டிய பல விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படாததும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டத்தில் செயல்படும் ‘ஆப்பிள் ஐபோன்’ செல்லிடப்பேசிகளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் ஊழியா்கள், ஊதியம் வழங்காததைக் கண்டித்து, அலுவலகத்தைத் தீயிட்டுக் கொளுத்தி வன்முறையில் ஈடுபட்டனா்.

கோலாா் மாவட்டம், நரசாபுரா தொழிற்பேட்டையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் செல்லிடப்பேசியை தைவான் நாட்டின் விஸ்ட்ரான் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் உற்பத்தி நிலையத்தில் ஐபோன்-7, லெனோவா, மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் கணினிப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த நிறுவனத்தில் 5,500 போ் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. இதில் 2 ஆயிரம் போ் ஒப்பந்தப் பணியாளா்கள். இவா்களுக்கு சில மாதங்களாக முறையாக ஊதியம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக டிசம்பர் 12-ம் தேதி காலை 6 மணி அளவில் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும், ஊழியா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, அலுவலகத்தின் மீது கல்வீசித் தாக்கியதோடு, கண்ணாடிகளை சேதப்படுத்தினா். வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தினா். அலுவலகத்தின் கணினிகள், மடிக் கணினிகளையும் உடைத்தனா். தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா் வன்முறையில் ஈடுபட்ட 110 ஊழியா்களைக் கைது செய்தனா்.
 
முழு கட்டுரையைப் படிக்க →