முகப்பு
இந்தியா

விவசாயப் போராட்டத்தில் சோலார் மூலம் மின்சாரம்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில், செல்போன் மற்றும் டிராக்டர் பேட்டரிகளுக்கு சோலார் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
விவசாயப் போராட்டத்தில் சோலார் மூலம் மின்சாரம்
பகிர்:

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில், செல்போன் மற்றும் டிராக்டர் பேட்டரிகளுக்கு சோலார் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

தில்லி - உத்தரப்பிரதேச எல்லையான காஸிப்பூர் பகுதியிலும் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களுக்குத் தேவையான அனைத்து விதமான வசதிகளையும் தாங்களாகவே செய்துகொண்டு வருகின்றனர்.

அந்தவகையில், காஸிப்பூர் எல்லையில் துணிதுவைக்கும் இயந்திரம், சப்பாத்தி இயந்திரம், உள்ளிட்டவை கொண்டுவரப்பட்டுள்ளதாலும் டிராக்டர் மற்றும் செல்போன்களுக்கு சார்ஜ் செய்யவும் சோலார் தகடுகளை விவசாயிகள் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.

இது குறித்து விவசாயி அம்ரித் சிங் பேசியதாவது, ''டிராக்டர் மற்றும் செல்போன்களுக்கு சார்ஜ் செய்வதற்காக சோலார் பேனலைக் கொண்டுவந்துள்ளோம். இதன் மூலம் எனது குடும்பத்தாருடன் நாள்தோரும் செல்போன் மூலம் என்னால் தொடர்பில் இருக்க முடியும்.

இன்னும் எத்தனை நாள்கள் சாலையில் அமர வேண்டும் என்று தெரியவில்லை. அரசாங்கம் நாங்கள் சொல்வதை காதுகொடுத்துக் கேட்கவில்லை. இதனால் இங்கிருந்து செல்லும் வரை எங்களுக்குத் தேவையானவற்றை நாங்களே செய்துகொள்ள முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.

இதேபோன்று சிங்கு, டிகிரி எல்லையில் தன்னார்வலர்கள் சிலர் செய்தித்தாள் அரங்கத்தைத் தொடங்கியுள்ளனர். நாட்டில் நாள்தோறும் நடக்கும் நிகழ்வுகளை விவசாயிகளுக்கு தெரியப்படுத்துவதற்காக இந்த அரங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →