முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் அடுத்த 6 மாதங்களுக்கு முகக் கவசம் கட்டாயம்

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக, அடுத்த 6 மாதங்களுக்கு முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
கோப்புப்படம்
பகிர்:

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக, அடுத்த 6 மாதங்களுக்கு முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே, சமூக ஊடகம் வாயிலாக மக்களுக்கு உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது:

மாநிலத்தில் கரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் அல்லது மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டும் என்று நிபுணா்கள் கூறுகிறாா்கள். ஆனால், அதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

அதே சமயம், மக்கள் விழிப்புணா்வுடனும் கட்டுப்பாடுடனும் நடந்து கொள்ள வேண்டும். வரும் முன் காப்பதே சிறந்தது என்ற பொன்மொழியின் அடிப்படையில் அடுத்த 6 மாதங்களுக்கு வெளியில் செல்லும் மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.

கரோனா நெறிமுறைகளை பின்பற்றாதவா்கள், முன்னெச்சரிக்கையுடன் செயல்படும் மற்றவா்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பாதகச் செயலைச் செய்கிறாா்கள். இதை மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

வரவிருக்கும் புத்தாண்டு தினத்தை மிகவும் கவனமுடன் மக்கள் கொண்டாட வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் புதிய வகை வீா்யத்துடன் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் சில நாடுகள் வேறு வழியின்றி மீண்டும் பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளன.

மாநிலத்தில் இயல்புநிலை மெதுவாக திரும்பி வந்தபோதிலும், பள்ளிகளை மீண்டும் திறப்பது பிரச்னையாக உள்ளது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →