அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவு
அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது. இதையொட்டி, தலைநகர் தில்லியில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து தேர்தல் தேதியை அறிவித்தார்.
அதில், அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். மேலும், 5 மாநில பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது.