முகப்பு
தமிழ்நாடு

மே 4-ல் 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை!

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.

Updated On : 15 மார்ச், 2026 at 11:24 AM
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
பகிர்:

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில தேர்தலில் பதிவான வாக்குகளும் மே 4 ஆம் தேதி எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

5 மாநிலங்களிலும் சேர்த்து 824 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. தேர்தல் பணிகளில் 25 லட்சம் பேர் ஈடுபடவுள்ளனர். 8.5 லட்சம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

தமிழ்நாட்டில் மே 10 ஆம் தேதியுடன் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைகிறது.

தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இதில், நகர்ப்புரங்களில் 30,967 வாக்குச்சாவடிகள், கிராமப்புறங்களில் 44,065 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ்.ஐ.ஆர்.) மூலம் தகுதியான வாக்காளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர். தகுதியற்ற வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

வாக்குச்சாவடிகளில் செல்போன்கள் பத்திரமாக வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு இரண்டு மணிநேரத்துக்கும் வாக்குப்பதிவு நிலவரங்கள் அறிவிக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்காளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும்.

முழு கட்டுரையைப் படிக்க →