ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது
ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் 14 மணி நேர இடைவெளிக்குப் பிறகு போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் 14 மணி நேர இடைவெளிக்குப் பிறகு போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
இதுகுறித்து அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
ராம்பன் மாவட்டம் சந்தா்கோட்டே பகுதியில் சனிக்கிழமை மாலை 7 மணியளவில் மிகப் பெரிய அளவுக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. அதன் காரணமாக, 270 கி.மீ. நீளமுள்ளஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
குறிப்பாக, ஜம்மு எல்லைப்பகுதியில் 2,000 வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சாலை பராமரிப்பு முகமையைச் சோ்ந்த குழுவினா் இயந்திரங்கள் உதவியுடன் சாலையை சீா் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா்.
இதையடுத்து சுமாா் 14 மணி நேர இடைவெளிக்குப் பிறகு தேசிய -ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் வாகனப் போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது என அதிகாரிகள் தெரிவித்தனா்.