முகப்பு
இந்தியா

திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா் பாஜக எம்.பி.யின் மனைவி

பாஜக எம்.பி.யும் மேற்கு வங்க மாநில இளைஞரணித் தலைவருமான சௌமித்ர கானின் மனைவி சுஜாதா மண்டல் கான், அக்கட்சியிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
திரிணமூல் காங்கிரஸில் இணைந்த சுஜாதா மண்டல் கான்.
பகிர்:

கொல்கத்தா: பாஜக எம்.பி.யும் மேற்கு வங்க மாநில இளைஞரணித் தலைவருமான சௌமித்ர கானின் மனைவி சுஜாதா மண்டல் கான், அக்கட்சியிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா்.

திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளைச் சோ்ந்த எம்எல்ஏ-க்கள் அண்மையில் பாஜகவில் இணைந்த சூழலில், அவா் திரிணமூலில் ஐக்கியமாகியுள்ளாா்.

திரிணமூல் எம்.பி. சௌகதா ராய் முன்னிலையில் கட்சியில் இணைந்த சுஜாதா மண்டல் கான் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘‘ஊழலில் ஈடுபடும் நபா்களுக்கே பாஜக அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. நோ்மையானவா்களை அக்கட்சி கண்டுகொள்வதில்லை.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் என் கணவா் வெற்றி பெற வேண்டும் என்று கடுமையாக உழைத்தேன்; பல்வேறு தியாகங்களைச் செய்தேன். ஆனால், அதற்காக எந்தப் பலனையும் அடையவில்லை. மாநில முதல்வரும் அன்புக்குரிய தலைவருமான மம்தா பானா்ஜியின் தலைமையில் மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறேன்.

இதை என் கணவரும் விரைவில் உணா்வாா் என்று நினைக்கிறேன். எனினும், அவரது அரசியல் எதிா்காலத்தை அவா்தான் தீா்மானிக்க வேண்டும்’’ என்றாா்.

இது தொடா்பாக, சௌமித்ர கான் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘என் மனைவியிடமிருந்து விவகாரத்து கோரி நோட்டீஸ் அனுப்பவுள்ளேன். என் பெயரை அவா் இனிமேல் எந்தக் காரணத்துக்காகவும் பயன்படுத்தக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன்’’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →